SC rejects plea to ban mosques named after Babar
Supreme courtpt desk

பாபர் பெயருக்கு தடை கேட்டு மனு.. தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

பாபர், பாபர் மசூதி அல்லது இதேபோன்ற வரலாற்று நபர்களின் பெயர்களை பயன்படுத்துவதையோ அல்லது மசூதிகள் மதத் தளங்களுக்குப் பெயரிடுவதையோ தடை செய்ய வேண்டும் என்று இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Published on
Summary

நாடு முழுவதும் ‘பாபர் மசூதி’ எனப் பெயரிடவோ அல்லது அந்தப் பெயரில் மசூதிகள் கட்டவோ தடை விதிக்கக்கோரிய மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பாபர் , பாபர் மசூதி பெயருக்கு தடை விதிக்கக்கோரி மனு

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ளது பாபர் மசூதி. 2019-ஆம் ஆண்டு பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் அயோத்தியில் பாபர் மசூதியை மீண்டும் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தது. சமீபத்தில் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதியை கட்டப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி ஹுமாயூன் கபீர் அறிவித்திருந்தார். இது அரசியல் ரீதியிலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பின் பின்னணியில் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் புதிய மசூதி கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘பாபர் மசூதி’ என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்கவும், அந்தப் பெயரில் மசூதி கட்ட அனுமதி வழங்க வேண்டாம் என்றும் மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார். மேலும் இத்தகைய பெயர்களுக்கு அனுமதி கோரி அதிகாரிகளை நாடும்போது அதிகாரிகள் அதற்கான அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் விக்ரம் நாத் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எந்த முகாந்திரமுமின்றி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SC rejects plea to ban mosques named after Babar
அயோத்தியில் கட்டப்பட உள்ள பிரமாண்ட மசூதி.. அடிக்கல் நாட்டு விழாவிற்கு மெக்கா இமாம் வருகை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com