திருப்பதி லட்டு
திருப்பதி லட்டுபுதிய தலைமுறை

”திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியலிருந்து கடவுளை தள்ளி வைத்திருக்க வேண்டும்” - உச்சநீதிமன்றம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
Published on

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

திருப்பதி கோயில் பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தின், உண்மை தன்மை குறித்தான விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு இன்று, பி.ஆர். கவாய் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இவ்விசாரணையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

திருப்பதி லட்டு
நலம் விசாரித்த பிரதமர்... பதிலடி கொடுத்த கார்கே... டென்ஷனான மத்திய அமைச்சர்கள்? என்ன நடந்தது?

அதில்,

  • “இந்த விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக கடவுளை வைத்திக்க வேண்டும்.

  • திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது தொடர்பான ஆய்வறிக்கையில் தெளிவில்லை.

  • அரசியல் சாசனத்தை கையில் வைத்திருக்கும் முதல்வர் அலுவலகம் கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும்.

  • ”லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்?

  • திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது ஏன்?

  • மத உணர்வுகளை மதிக்க வேண்டும்.

  • எஸ்.ஐ.டி., குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் என்ன?

  • கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது. ”

    என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com