ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு

ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு

ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு
Published on

பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது ‌இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றது. அப்போது ஆஜரான அட்டர்னி ஜென்ரல் கே.கே.வேணுகோபால், கட்டாய ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசத்தை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு விரும்புவதாக தெரிவித்தார். புதிதாக வங்கி கணக்கு தொடங்கும் போது ஆதார் எண் கட்டாயம் தேவை என்பது தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார். 

இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி முதல் இறுதிகட்ட விசாரணை நடத்தப்படும் என்றும் அரசியல் சாசன அமர்வு தெரிவித்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com