முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவிடாமல் கேரள அரசு தடுப்பதாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்க வேண்டும் என கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், முல்லைப் பெரியாறு தொடர்பான தீர்ப்பில் “அணையை பராமரிக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது என்றும் கேரள அரசு அணையின் பாதுகாப்பை மேற்கொள்ளும் எனவும் கூறப்பட்டிருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கேரளா அரசு அணையில் பரமரிப்புப் பணியை மேற்கொள்ள விடாமல் தடுப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே எஸ் கேஹர், நீதிபதி டிஒய் சந்திரகாத், எஸ்.கே.கவூல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் மனு மீது கேரளா பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.