
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.
முன்னதாக அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளதால் சட்டம் -ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் கண்காணிக்காவும், உளவுத்துறை கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்கவும் உள்துறை கூறியுள்ளது.