விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவது எப்போது? அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்

விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவது எப்போது? அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்
விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவது எப்போது? அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்

தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து ஆறு வாரங்களுக்குள்  நிலை அறிக்கை  தாக்கல்  செய்யுமாறு  உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு ஒப்படைப்பதற்கு இங்கிலாந்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆறு வாரங்களில் நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது. இங்கிலாந்தில் சில சட்ட நடவடிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளன, இதுதான் விஜய்மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதை தாமதப்படுத்துகிறது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

நீதிபதிகள் யு யு லலித் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் இந்த விவகாரத்தில் நிலை அறிக்கையை ஆறு வாரங்களில் தாக்கல் செய்யுமாறு கேட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் இருந்து விடுதலை கோரி மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் இ சி அகர்வாலாவின் மனுவை ஏற்க பெஞ்ச் மறுத்துவிட்டது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சம்பந்தப்பட்ட ரூ .9,000 கோடிக்கு மேல் வங்கி கடன் செலுத்த தவறிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மல்லையா தப்பியோடி இங்கிலாந்தில் உள்ளார். மார்ச் 2016 முதல் இங்கிலாந்தில் வசிக்கும் இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்து யார்டால் கைதுசெய்யப்பட்டு  ஏப்ரல் 18, 2017 அன்றுமுதல் ஜாமீனில் இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com