இனி குறைந்தபட்ச இருப்பு அவசியமில்லை : ஸ்டேட் வங்கி அதிரடி அறிவிப்பு

இனி குறைந்தபட்ச இருப்பு அவசியமில்லை : ஸ்டேட் வங்கி அதிரடி அறிவிப்பு
இனி குறைந்தபட்ச இருப்பு அவசியமில்லை : ஸ்டேட் வங்கி அதிரடி அறிவிப்பு


ஸ்டேட் வங்கியின் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ. சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாநகரம், நகரம் மற்றும் கிராமப் புறத்தில் இருப்பவர்கள் அனைவரும் முறையே ரூ.3000, ரூ.2000, ரூ.1000 என தங்களது வங்கிக் கணக்கில் குறைந்தப்பட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டும். அப்படி, குறைந்தப்பட்ச தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5 முதல் ரூ.15 வரை அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இனி குறைந்தபட்ச வைப்புத்தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது. குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை எனக் கூறி அடிக்கடி பணம் எடுக்கப்பட்டு வந்ததால் வாடிக்கையாளர்கள் பலர் எஸ்பிஐ சேமிப்பு கணக்கை பயன்படுத்துவதை நிறுத்தினர். இத்தகைய சூழலில் ஸ்டேட் வங்கி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியாக தகவலாக உள்ளது.

கடந்தாண்டு மட்டும் வங்கிக் கணக்கில் குறைந்த இருப்பு தொகை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டும் 235 கோடி ரூபாய் வரை பாரத ஸ்டேட் வங்கி அபராதம் வசூலித்திருப்பது தெரியவந்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சந்திரசேகர் கவுட் என்பவர் கேட்ட கேள்விக்கு, மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி இந்த தகவலை அளித்திருந்தது. அதன்படி 2019 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை முதல் காலாண்டு வரை பாரத ஸ்டேட் வங்கி 388 கோடி வங்கி கணக்குகளில் குறைந்த இருப்பு தொகை வைத்திருந்ததாக 235 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com