MSME PT Web
இந்தியா
15 - 45 நிமிடங்களில் கடன் தொகையை பெறலாம்... MSME நிறுவனத்தினருக்கு SBI கொடுத்த ஹேப்பி நியூஸ்!
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருக்கு ஒரு நல்ல செய்தியை பாரத ஸ்டேட் வங்கி வழங்கி உள்ளது. அதுபற்றி விரிவாக அறியலாம்...
பாரத ஸ்டேட் வங்கி தலைவர் சி.எஸ். செட்டி, பிடிஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் (எம்எஸ்எம்இ - MSME) எளிதாக கடன் பெறவும் அது தொடர்பான நடைமுறைகளை எளிதாக்கவும் எம்எஸ்எம்இ சஹஜ் (MSME Sahaj) என்ற பெயரில் நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 முதல் 45 நிமிடங்களில் கடன் தொகையை பெற முடியும்.
msme sahaj sbi
எம்எஸ்எம்இ பிரிவினருக்கு உடனடி கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கக் கூடிய தொகையின் வரம்பு, 5 கோடி ரூபாயிலிருந்து மேலும் அதிகரிக்க உள்ளது. இக்கடனை வழங்குவதற்கு தற்போது 22,542 கிளைகள் இருக்கின்றன. இந்தாண்டு மேலும் 600 கிளைகள் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்