சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்புச் சம்பவம் - உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம்
சாத்தான்குளம் விசாரணைக் கைதிகள் உயிரிழப்புக்கு உச்சநீதி மன்ற வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
உச்ச நீதி மன்ற வழக்கறிஞர்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது “ விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது வேதனையும், அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்தியுள்ளது. குறிப்பாக சாத்தான் குளத்தில் 19, 20 ஆகிய தேதிகளில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் அரசு மருத்துவமனையில் கைதிகளை சோதித்த மருத்துவர் சரியாக சோதனை செய்யமால் சான்றிதழ் கொடுத்துள்ளார். அவரை சிறையில் அடைக்க அனுமதியளித்த நீதிபதியும் அவரை சரியாக சோதனை செய்யாமல் அனுமதி அளித்துள்ளார்.ஆகவே சம்பந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவர்கள் மீது குற்ற வழக்கையும் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு காவல்துறை விதிமுறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.