இந்தியா
ஒசூர் எம்எல்ஏ வீட்டிற்கு சென்றாரா சசிகலா?: ரூபா குற்றச்சாட்டு
ஒசூர் எம்எல்ஏ வீட்டிற்கு சென்றாரா சசிகலா?: ரூபா குற்றச்சாட்டு
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா ஒசூர் எம்எல்ஏ வீ்ட்டிற்கு சில முறை சென்று வந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறைக்கு அருகிலுள்ள ஒசூர் எம்எல்ஏ வீட்டிற்கு சசிகலா சென்றதை நிரூபிக்கும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக கர்நாடக டிஐஜி ரூபா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறையிலிருந்து சசிகலா வெளியில் சென்று வந்தது உள்ளிட்ட தகவல்கள் கொண்ட அறிக்கையை ரூபா கடந்த சனிக்கிழமை லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் சமர்ப்பித்தார். அதில் சசிகலா வெளியில் சென்று வந்ததை சிறை கேமரா பதிவுகள் உறுதிப்படுத்துவதாகவும் ரூபா குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா விவகாரத்தில் கர்நாடக உள்துறை அமைச்சகத்துக்கு சிறை அதிகாரிகள் தவறான தகவல் தந்து கொண்டிருப்பதாக அந்த அறிக்கையில் ரூபா குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.