இந்தியா
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல், மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், சசிகலா உடல்நிலை குறித்த அறிக்கையை விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
அதில், சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு இருக்கும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், உணவே தாமே உட்கொள்வதாகவும், உதவியுடன் நடப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.