சசிகலா விவகாரம்: தேர்தல் கமிஷனரை சந்தித்தார் தம்பிதுரை

சசிகலா விவகாரம்: தேர்தல் கமிஷனரை சந்தித்தார் தம்பிதுரை

சசிகலா விவகாரம்: தேர்தல் கமிஷனரை சந்தித்தார் தம்பிதுரை
Published on

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமைத் தேர்தல் கமிஷனரை இன்று சந்தித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா. ஓ. பன்னீர்செல்வம் அணியினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் இரட்டை சிலை சின்னத்தை தங்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்று பன்னீர் செல்வம் அணியினர் தலைமை தேர்தல் கமிஷனரைச் சந்தித்து, கோரிக்கை வைத்தனர். இதுபற்றி வரும் 20-ம் தேதிக்குள் முடிவெடுக்க இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

இதையடுத்து நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில், தமிழக அமைச்சர்கள் நான்கு பேர் உட்பட 20 பேர் இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனர், நஜீம் ஜைதியை இன்று காலை சந்தித்தனர். அவரிடம் அதிமுகவின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லும் என வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, சசிகலா நியமன விவகாரத்தில் விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன என்றும் இடைத்தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால், பன்னீர்செல்வம் அணியினர் வைத்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்யக்கூடாது என்றும் கோரிக்கை வைத்ததாகக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com