பாஜகவில் சேரப்போவதாக வந்த தகவலை மறுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் சசிதரூர்.
திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர், பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாயின.
தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஒத்துழைக்க, கமல்ஹாசன் உட்பட பலருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அப்போது சசிதரூருக்கும் அழைப்பு
விடுத்திருந்தார். அப்போதே அவர் பாஜவில் சேரப்போவதாகக் கூறப்பட்டது. இதை மறுத்தார் சசிதரூர். இப்போது அவர் மீண்டும் பாஜகவில் சேரப்போவதாக
செய்திகள் வெளியாயின. இதை அவர் மறுத்துள்ளார். ’என்னிடம் பலர் இதுபற்றிக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற ஆதாரமற்ற வதந்தி அவ்வப்போது
வந்துகொண்டே இருக்கிறது. இதை நிராகரிக்கிறேன்’ என்று சசிதரூர் கூறியுள்ளார்.