தனி நாடா?: சசி தரூர் கோபம்

தனி நாடா?: சசி தரூர் கோபம்

தனி நாடா?: சசி தரூர் கோபம்
Published on

தனிநாடு போன்ற தேசவிரோதக் கொள்கைகளைத் தூண்ட வேண்டாம் என எனது சக தென்னிந்திய மக்களிடம் கேட்டுக்கொள்வதாக திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யத் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் டிவிட்டர் தளத்தில் #dravidanadu என்ற ஹேஷ்டேக் நேற்று மாலை முதல் ட்ரெண்டாகி வருகிறது. தென்னிந்திய மக்களை ஒருங்கிணைத்து தனிநாடு என்ற கருத்தை முன்வைத்து பலரும் தங்களது கருத்துக்களை இந்த ஹேஷ்டேகில் பதிவு செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து தனது டிவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள எம்.பி சசி தரூர், ’பாஜக அரசின் மீதான விமர்சனங்கள் சரிதான் என்றாலும், தனிநாடு போன்ற தேசவிரோத கொள்கைகளை தூண்டவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். நாம் ஒன்றிணைந்து இந்தியாவை மேம்படுத்துவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com