\
பாஜகவில் சேர்ந்தார் பிரபல நடனக்கலைஞர் சப்னா சவுத்ரி

பாஜகவில் சேர்ந்தார் பிரபல நடனக்கலைஞர் சப்னா சவுத்ரி

பாஜகவில் சேர்ந்தார் பிரபல நடனக்கலைஞர் சப்னா சவுத்ரி
Published on

பிரபல பாடகியும் நடனக்கலைஞருமான சப்னா சவுத்ரி பாஜகவில் இன்று இணைந்தார்.

ஹரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகி மற்றும் நடனக் கலைஞர் சப்னா சவுத்ரி.  இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் டெல்லியில், பாஜகவுக்காக பிரசாரம் செய்தார். அப்போதே இவர் பாஜக-வில் சேர்வதாகக் கூறப்பட்டது. இதை அவர் மறுத்தார். இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில், இன்று நடந்த கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியின்போது கட்சியில் இணைந்தார்.

பாஜக நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உறுப்பினர் சேர்ப்பு பணியை, பாஜக இன்று தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது அவர் இணைந்தார். டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, சிவ்ராஜ் சிங் சவுகான், ராம் லால் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com