சுவாசக்கோளாறு.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர்  சஞ்சய் தத்!

சுவாசக்கோளாறு.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்!

சுவாசக்கோளாறு.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்!
Published on

பாலிவுட் ஸ்டார் சஞ்சய்தத், சனிக்கிழமை மாலை திடீரென சுவாசக்கோளாறு மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். உடனே அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவருக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோனா பரிசோதனையில் சஞ்சய்தத்துக்கு கொரோனா பாதிப்பில்லை என்றும் தெரியவந்தது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com