\
சானியா மிர்சா தங்கையை திருமணம் செய்யும் அசாருதீன் மகன் 

சானியா மிர்சா தங்கையை திருமணம் செய்யும் அசாருதீன் மகன் 

சானியா மிர்சா தங்கையை திருமணம் செய்யும் அசாருதீன் மகன் 
Published on

அசாருதீன் மகன் ஆசாத்தை சானியா மிர்சாவின் தங்கை ஆனம் திருமணம் செய்யவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் அசாருதீன். 1990களில் இந்திய அணிக்காக இவர் விளையாடினர். இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தவர். கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது வரை கட்சியில் நீடித்து வருகிறார். அதேபோல், டென்னிஸ் விளையாட்டில் மிகவும் பிரபலமானவர் சானியா மிர்ஸா. இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், அசாருதீன் மகன் ஆசாத்தை சானியா மிர்சாவின் தங்கை ஆனம் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. அதனை சானியா மிர்ஸா உறுதி செய்துள்ளார். சனியா மிர்ஸா டைம் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “ஆம் எனது தங்கை டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேம். அவர் ஒரு அழகான பையனை திருமணம் செய்யவுள்ளார். அவர் பெயர் ஆசாத். அவர் முகமது அசாருதீன் மகன்” என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com