சமாஜ்வாதி கட்சி தலைவராக மீண்டும் அகிலேஷ் தேர்வு
சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவராக அகிலேஷ் யாதவ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் கடந்த முறை உத்தரபிரதேச முதல்வராக பதவி வகித்தார். அப்போது முலாயம் சிங்கிற்கும், அகிலேஷ் யாதவிற்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அப்போது, அகிலேஷ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பாலான ஆதரவு இருந்ததால், அகிலேஷ் கட்சி மற்றும் சின்னத்தையும் கைப்பற்றினார்.
இந்நிலையில் இன்று ஆக்ராவில் நடைபெற்ற சமாஜ்வாதி கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் அகிலேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் இதை உறுதி செய்தார். கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையிலும் அகிலேஷ் யாதவிற்கு, அவரது தந்தை முலாயம் சிங் மற்றும் சித்தப்பா சிவபால் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.