சமாஜ்வாதி நிர்வாகியை அடிக்க பாய்ந்த பொதுச் செயலாளர் - விழுந்து விழுந்து சிரித்த அகிலேஷ்!

சமாஜ்வாதி நிர்வாகியை அடிக்க பாய்ந்த பொதுச் செயலாளர் - விழுந்து விழுந்து சிரித்த அகிலேஷ்!

சமாஜ்வாதி நிர்வாகியை அடிக்க பாய்ந்த பொதுச் செயலாளர் - விழுந்து விழுந்து சிரித்த அகிலேஷ்!

உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது சமாஜ்வாதி நிர்வாகியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அடிக்கச் சென்றதும், அதனைக் கண்ட கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விழுந்து விழுந்து சிரித்ததும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உத்தரபிரதேசத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அங்கு அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரச்சாரத்தின் தீவிரம் ஒருபுறம் அதிகரிக்க அதிகரிக்க, மறுபுறம் அவற்றில் பல சுவாரசியமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. கட்சியில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்பது தொடர்பாக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்படுவதும், சில சமயங்களில் அவை கைகலப்பில் முடிவதும் உத்தரபிரதேசத்தில் அன்றாடம் பார்க்கக் கூடிய காட்சிகளாக மாறிவிட்டன.

அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பாஹ் தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் தேர்தல் பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கலந்து கொண்டார். இந்நிலையில், பிரச்சாரக் கூட்டத்தில் சமாஜ்வாதி பொதுச் செயலாளர் ராம்ஜிலால் சுமன் பேசிக் கொண்டிருக்கும் போது, மேடையில் அமர்ந்திருந்த அகிலேஷ் யாதவிடம் கட்சியின் ஆக்ரா மாவட்ட தலைவர் ஜிதேந்திர வர்மா உரையாடிக் கொண்டிருந்தார். இதனை கவனித்த ராம்ஜிலால் சுமன், திடீரென பேச்சை நிறுத்திவிட்டு ஜிதேந்திர வர்மாவை அடிக்க பாய்ந்தார். இதனால் சில நொடிகள் அகிலேஷ் யாதவ் உட்பட மேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், ராம்ஜிலால் சுமன் வர்மாவை அடிக்காமல் மீண்டும் பேச சென்றார். இதனைக் கண்ட அகிலேஷ் யாதவ் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனால் சில நிமிடங்கள் மேடையே சிரிப்பலையில் ஆழ்ந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com