\
மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு
மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரிப்புweb

பெட்ரோல் விலை தொடர் உயர்வு எதிரொலி.. மின்சார வாகனம் பக்கம் திரும்பும் மக்கள்!

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் எதிர்காலத்தில் இப்பிரச்னை எவ்வளவு தூரம் பூதாகரமாக வெடிக்கும் என தெரியாத நிலை உள்ளது. இதனால் மின்சார வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Published on
Summary

பெட்ரோல் விலை ஏற்றம் மக்களின் வாகனத் தேர்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு இருச்சக்கர வாகனங்களில் 6.11% மட்டுமே இருந்த மின்சார வாகன விற்பனை, இப்போது 9.25% ஆக உயர்ந்துள்ளது; வருங்காலத்தில் இந்த விகிதம் மேலும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். மின்சார வாகனங்கள் வாங்குவது தொடர்பாக விசாரிக்க வருபவர்கள் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருவதாக வாகன விற்பனையாள்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சார வாகனம்
மின்சார வாகனம்

மொத்த இருச்சக்கர வாகன விற்பனையில் கடந்தாண்டு 6.11% ஆக இருந்த மின்சார இருச்சக்கர வாகனங்களின் பங்கு தற்போது 9.25%ஆக அதிகரித்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் மேலும் உயரும் என்றும் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு
புற்றுநோய் மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு.. விலை உயர்வால் முடங்கிய கீமோதெரபி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com