file image
file imagex

மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகள்; ஆனா 20,000 ஆசிரியர்களுக்குச் சம்பளம் - அதிர்ச்சித் தகவல்!

2024-25 கல்வியாண்டில் நாடு முழுவதும் சுமார் 8,000 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேர்க்கை இல்லை எனவும் மாணவர்களே இல்லாத இந்தப் பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.
Published on

நாடு முழுவதும் சுமார் 8,000 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேர்க்கை இல்லை என்ற அதிர்ச்சித் தகவலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும், மாணவர்களே இல்லாத இந்தப் பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

file image
file image pt web

முக்கியமாக 2024-25 கல்வியாண்டில் நாடு முழுவதும் மொத்தம் 7,993 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக உள்ளது. (முந்தைய ஆண்டில் இது 12,954 ஆக இருந்தது, தற்போது குறைந்துள்ளது). மேலும், மாணவர் சேர்க்கை இல்லாத இந்தப் பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு நிதி செலவிடுகிறது.

மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கையில் மேற்கு வங்கம் (3,812) முதலிடத்தில் உள்ளது. மேலும், இந்தப் பள்ளிகளில் 17,965 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இதுவே, இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையாகும். இந்தப் பட்டியலில் தெலுங்கானா (2,245 பள்ளிகள்) இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு 1,016 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

file image
Bihar Election 2025 | கட்சி பேதமின்றி ஆதிக்கம் செலுத்தும் வாரிசுகள்.. தேர்தலில் போட்டாபோட்டி!

இந்த பள்ளிகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. மக்கள் இடம்பெயர்வு , தனியார் பள்ளிகள் மீதான ஆர்வம் மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் போன்ற காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமக்ர சிக்‌ஷா அபியான்
சமக்ர சிக்‌ஷா அபியான்pt web

சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த நிலை கண்டறியப்பட்டுள்ளது. வளங்களைப் பயன்படுத்துவதை மேம்படுத்தும் நோக்கில், மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடுதல் அல்லது அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பு: இந்தத் தரவுகள் மத்திய கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

file image
5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது இந்தியா - சீனா நேரடி விமான சேவை ..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com