\
பாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்

பாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்

பாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்
Published on

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் இணைந்துள்ளார்.

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். ஹரியானாவில் பிறந்த இவருக்கு, தற்போது வயது 29. இந்தியாவிற்காக சர்வதேச அளவினான போட்டிகளில் பங்கேற்று 24 முறை பட்டங்களை வென்றுள்ளார். முன்னாள் உலக நம்பர் ஒன்னான சாய்னா நேவால், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவர். விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது உள்ளிட்ட பல விருதுகள் சாய்னா நேவாலுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சாய்னா நேவால் இணைந்துள்ளார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்று முறைப்படி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் சாய்னா நேவால்.

ஏற்கெனவே முன்னாள் கிரிக்கெட் வீரான கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்து தற்போது எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சாய்னா நேவால் பாஜகவில் இணைந்துள்ளார். வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சாய்னா நேவால் பாஜகவில் இணைந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com