“வார்த்தைகளால் கூற முடியாத அளவிற்கு அதிர்ச்சி” - ஷின்சோ அபே மறைவிற்கு மோடி இரங்கல்

“வார்த்தைகளால் கூற முடியாத அளவிற்கு அதிர்ச்சி” - ஷின்சோ அபே மறைவிற்கு மோடி இரங்கல்
“வார்த்தைகளால் கூற முடியாத அளவிற்கு அதிர்ச்சி” - ஷின்சோ அபே மறைவிற்கு மோடி இரங்கல்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளநிலையில், அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாளை ஒரு நாள் நாடு முழுவதும் தூக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

'எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபே மறைவு குறித்து அறிந்தபோது, வார்த்தைகளால் கூற முடியாத அளவிற்கு அதிர்ச்சி அடைந்தேன். உலக அளவில் ஒரு சிறந்த அரசியல்வாதி, சிறந்த தலைவர், குறிப்பிடக் கூடிய வகையில் சிறந்த நிர்வாகியாகவும் ஜப்பான் நாட்டினை உலக அளவில் சிறந்த நாடாக மாற்ற அவர் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர்' என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஷின்சோ அபே உடனான உறவு பல ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு ஏற்பட்டதாகவும், குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோதும், இந்தியப் பிரதமராக பதவியேற்ற போதும் இருவருக்குமான உறவு தொடர்ந்தது. உலக அளவிலான பொருளாதாரம் மற்றும் இதர விவகாரங்கள் குறித்து அவருடைய கற்றல் அறிவு மீதான தாக்கம் தனக்கு எப்போதும் இருப்பதாகவும், சமீபத்தில் ஜப்பான் சென்று இருந்த போது கூட ஷின்சோ அபேவை சந்தித்து பல விஷயங்கள் குறித்து பேசுவதற்கு தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஜப்பான் சந்திப்பில் எங்கள் இருவருக்கும் நடந்த சந்திப்பு தான் இறுதியானதாக இருக்கும் என தான் நினைக்கவில்லை என்று கூறியுள்ள பிரதமர் மோடி கடைசியாக அபேவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இக்கட்டான சூழலில் அவரின் குடும்பத்தினருக்கும் ஜப்பானிய மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். இந்தியா - ஜப்பான் இடையிலான உறவை வலுப்படுத்துவதிலும் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்வதிலும் ஷின்சோ அபேவின் பங்கு அதிகம் இருந்ததது. வருத்தமான சூழலில் ஒட்டுமொத்த இந்தியாவும் ஜப்பான் மக்களுடன் நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நாளை ஒரு நாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஷின்சோ அபே சுடப்பட்டது தொடர்பாக ஜப்பான் பிரதமர் கிஷீடா பத்திரிகையாளர்களை சந்தித்த போது, அபே சுடப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை விசாரணை நடந்து வருவதாகவும் ஆனால் முன்னாள் பிரதமர் அபே சுடப்பட்டது காட்டுமிராண்டித்தனமான செயல் என ஜப்பான் பிரதமர் கிஷீடா கண்டனம் தெரிவித்திருந்தார். ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று ஜப்பான் அமைச்சரவை கூட்டம் அவசரமாக கூடுகிறது.

- டெல்லியிலிருந்து நிரஞ்சன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com