\
ஏர்ஃபோர்ஸ் வீரர்களுடன் படம் பார்த்த சச்சின்!

ஏர்ஃபோர்ஸ் வீரர்களுடன் படம் பார்த்த சச்சின்!

ஏர்ஃபோர்ஸ் வீரர்களுடன் படம் பார்த்த சச்சின்!
Published on

சாதனை நாயகன் சச்சினின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள, எ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படத்தின் முதல்காட்சி இந்திய விமானப் படை வீரர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. டெல்லியில் விமானப்படை வீரர்களுடன் இணைந்து திரைப்படத்தை சச்சின் கண்டு ரசித்தார். திரைப்படம் தயாரிக்கப்பட்ட போதே, தேசப்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள படை வீரர்களுக்குத் தான் முதலில் திரையிட்டு காண்பிக்க வேண்டும் என தாம் முடிவெடுத்திருந்ததாக சச்சின் தெரிவித்தார். கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய விமானப்படை, குருப் கேப்டன் அந்தஸ்தை சச்சினுக்கு வழங்கியது நினைவு கூரத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com