\
மகர விளக்கு பூஜைக்காக இன்று சபரிமலை நடை மீண்டும் திறப்பு

மகர விளக்கு பூஜைக்காக இன்று சபரிமலை நடை மீண்டும் திறப்பு

மகர விளக்கு பூஜைக்காக இன்று சபரிமலை நடை மீண்டும் திறப்பு
Published on

இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றுகிறார்கள். நாளை (31.12.22) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்ககப்பட்டது முதல் மண்டல பூஜை காலமான 41 நாட்களில் மட்டும் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய தங்க அங்கி சார்த்திய ஐயப்பனுக்கு டிசம்பர் 26ம் தேதி மகா தீபாராதனையும் 27ம் தேதி மண்டல பூஜையும் நடந்து நடை அடைக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி சபரிமலையில் மகரவிளக்கு பூஜையும் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனம் நடக்கும். மகரவிளக்கு பூஜைக்காலம் முடிந்ததும் ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

ஜனவரி 20ம் தேதி பந்தள மகாராஜா குடும்பத்தினர் தரிசனத்தோடு சபரிமலை நடை அடைக்கப்பட்டு, சபரிமலை சன்னிதான சாவி பந்தள மகாராஜா குடும்பத்தினரிடம் வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com