"கற்பூர ஆழி" ஊர்வலத்தால் விழாக்கோலம் பூண்டது சபரிமலை

மண்டல பூஜையின் முன்னோடியாக மேள தாளங்கள் முழங்க, பக்தி பரவசத்துடன் நடந்த கேரள காவல் துறையினரின் கண்கவர் "கற்பூரஆழி" ஊர்வலத்தால், சபரிமலை விழாக்கோலம் பூண்டது.

சபரிமலையில் வரும் 27ஆம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. இதை வரவேற்கும் பொருட்டு சபரிமலை சன்னிதானத்தில் பணியாற்றும் காவலர்களின் "கற்பூர ஆழி" ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் நடந்தது.

Sabarimalai
Sabarimalaipt desk

சபரிமலையில் தீபாராதனை முடிந்து மாலை 6.35 மணிக்கு கொடி மரத்தின் கீழ், கோயில் தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு மற்றும் மேல்சாந்தி மகேஸ் நம்பூதிரி இணைந்து கற்பூர ஆழிக்கு தீபம் பகிர்ந்து "ஆழி" ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

புலிமேல் வரும் ஐப்பபன் துவங்கி அனுமர், பார்வதி, பரமசிவன் வரை தத்ரூப கடவுளாய் காட்சியளித்தவர்களின் கலைமிகு நடனங்கள் காண்போரைக் கவர்ந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com