மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, கடந்த 27 ஆம் தேதி சாத்தப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜைக்காக, கோயில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அதோடு வரும் 2020ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி மகர விளக்கு நாளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகர விளக்கன்று பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதியை காண இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மகர விளக்கு பூஜைக்காலம் முடியும் நாளான ஜனவரி 20 ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடை அடைக்கப்படும் என கேரள தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது.