''விளம்பரம் தேடுவோருக்கு பாதுகாப்பு தர முடியாது''- கேரள அமைச்சர்
சுய விளம்பரம் தேடிக் கொள்வதற்காக சபரிமலைக்கு வரும் பெண் சமூக செயற்பாட்டாளர்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு வழங்காது என தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டைபோல, இந்த முறையும், சபரிமலைக்கு வர முயற்சிக்கும் பெண்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு வழங்கும் என வெளியான தகவல்களில் உண்மை இல்லை என அவர் கூறினார். ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பெண்கள், அதற்கான உத்தரவை நீதிமன்றத்திடம் இருந்து பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சபரிமலை கோயிலின் நடை மண்டல பூஜைக்காக இன்று மாலை திறக்கப்பட உள்ளது. கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமலிருக்க ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் சபரிமலைக்கு ஏராளமான பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ள நிலையில் அவர்களிடம் நிலைமையின் தீவிரத்தை கூறி கோயிலுக்கு வருவதை தடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.