இந்தியா
மகரவிளக்கு பூஜை: நவ.16-ல் சபரிமலை கோவில் திறப்பு
மகரவிளக்கு பூஜை: நவ.16-ல் சபரிமலை கோவில் திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜைக்காக வரும் 16ஆம் தேதி நடை திறக்கப்படவுள்ளது.
சபரிமலையில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக ஆண்டு தோறும் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்தாண்டு வரும் 16ஆம் தேதி மாலை ஐயப்பன் கோவில் திறக்கப்படுகிறது. டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது.
ஜனவரி 15ஆம்தேதி மகர ஜோதியை காண பொன்னம்பலமேட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால்,அதற்கேற்ற வகையில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.