\
Sabarimala Gold Crown Is Safe, Says Thiruvabharana Commissioner
சபரிமலைANI

சபரிமலை தங்க கிரீடம் திருடு போனதா? திருவாபரண ஆணையர் விளக்கம்!!

சபரிமலையின் தங்க கிரீடம் பாதுகாப்பாக உள்ளதாக திருவாபரண ஆணையர் ரெஜிலால் விளக்கமளித்துள்ளார்.
Published on

கேரளாவின் மிகவும் பிரசித்த கோவில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோவில். இந்தக் கோவிலுக்கும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமாக பக்தர்கள் சென்று வருகின்றனர். இதற்கிடையில், அந்தக் கோவிலைச் சுற்றி ஏரளமான முறைகேடு சர்ச்சைகளும் இருந்து வருகின்றன.

அந்த வகையில் தான், கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 55.75 சவரன்கள் ( 446 கிராம்) எடையுள்ள தங்க கீரிடம் காணமல் போனதாக தகவல் வெளியாகி சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, அசல் கீரிடத்திற்கு போலியான கீரிடம் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

சபரிமலை
சபரிமலைANI

இந்தச்சூழலில் தான், தங்கக் கிரீடம் காணாமல் போனதாக கூறப்பட்ட தகவலுக்கு திருவாபரண ஆணையர் ரெஜிலால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சபரிமலையின் "ஸ்டிராங் ரூம்" மில் வைக்கப்பட்டிருந்த "அசல் தங்கக் கிரீடம்" அதே பாதுகாப்பு அறையில் பத்திரமாக உள்ளது. பாதுகாப்பு அறையில் மதிப்புமிக்க ஆபரணங்களின் பிரதிகள் மற்றும் மாதிரிகள் உட்பட பல்வேறு பொருட்கள் உள்ளன. எனவே சரிபார்ப்பின் போது குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என விளக்கமளித்துள்ளார்.

Sabarimala Gold Crown Is Safe, Says Thiruvabharana Commissioner
எஸ்.ஐ.ஆர் | ஸ்டாலின், மம்தா தோல்வி.. சந்தேகம் கிளப்பிய அபிஜித் திப்கே!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com