சபரிமலை: மகரஜோதி தரிசனத்திற்குப் பின்பும் ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை: மகரஜோதி தரிசனத்திற்குப் பின்பும் ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
சபரிமலை: மகரஜோதி தரிசனத்திற்குப் பின்பும் ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்குப் பின்பும் ஞாயிறு விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் 20 லட்சத்துக்கும் அதிகமான ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முடித்துள்ளனர். குறிப்பாக கடந்த ஜனவரி 14-ஆம் தேதி சபரிமலையில் நடந்த சிறப்பு பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி 14-ம் தேதி மகர விளக்கு பூஜையும மகரஜோதி தரிசனமும் முடிந்த பின்பு சனிக்கிழமையான நேற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் நிரம்பி வழிந்தது. விடுமுறை நாளான (இன்று) ஞாயிற்றுக்கிழமை சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

அதிகாலை 3 மணிக்கு பள்ளி உணர்தலோடு 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்பதால், நேற்று இரவில் இருந்தே நடைப்பந்தலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களோடு அதிகாலையில் வந்து குவிந்த ஐயப்ப பக்தர்களும் சேர்ந்ததால் சபரிமலை சரண கோஷத்தில் திணறியது.

இதனால் நடைப் பந்தலில் அதிகாலையில் இருந்தே பலமணி நேரம் காத்திருந்து பக்தர்கள் படிப்படியாக அனுப்பப்பட்டு தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. சபரிமலையில் தரிசனம் செய்ய நாள்தோறும் 60 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், ஸ்பாட் புக்கிங் செய்யப்படுவதாலும், ஞாயிறு விடுமுறை நாள் என்பதாலும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலை நடை வரும் 20-ஆம் தேதி வரை திறந்திருக்கும் என தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 19ஆம் தேதி வரை ஐயப்ப பக்தர்களுக்கு தரிசனம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 20ம் தேதி பந்தள ராஜ குடும்பத்தின் ஆச்சார சடங்குகள் நடக்க உள்ளதால் அன்று பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை.

ஜனவரி 20ஆம் தேதி நடக்கும் பந்தள அரச குடும்பத்தின் ஆச்சார சடங்குகளுக்குப் பின் இரவு சபரிமலை நடை அடைக்கப்பட்டு சபரிமலையின் சாவி பந்தள ராஜ குடும்பத்தின் மூத்த உறுப்பினரிடம் ஒப்படைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com