ரூ.650 கோடி கருப்புப் பணம்: எஸ்.எம்.கிருஷ்ணா மருமகனுக்கு நெருக்கடி

ரூ.650 கோடி கருப்புப் பணம்: எஸ்.எம்.கிருஷ்ணா மருமகனுக்கு நெருக்கடி

ரூ.650 கோடி கருப்புப் பணம்: எஸ்.எம்.கிருஷ்ணா மருமகனுக்கு நெருக்கடி
Published on

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வீட்டில் ரூ.650 கோடி கருப்புப் பணம் சிக்கியுள்ளது.

எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்தா, பிரபல தொழிலதிபர். காபி டே-ன் நிறுவனரான இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.650 கோடிக்கும் மேற்பட்ட கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடைய ஐ.டி நிறுவனம், சுற்றுலா நிறுவனம் மற்றும் அலுவலக கட்டிடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கைப்பற்ற இந்த பணம், வரி ஏய்ப்பு செய்யப்பட்ட கருப்புப் பணம் என்பதற்கும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 
கடந்த 4 நாட்களாக கர்நாடகா, சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட 25 இடங்களில் சோதனை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com