இந்தியாவுக்கான ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு எத்தனை சதவிதம்?

இந்தியாவுக்கான ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு எத்தனை சதவிதம்?

இந்தியாவுக்கான ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு எத்தனை சதவிதம்?
Published on

இந்தியாவுக்கான ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 69 விழுக்காட்டிலிருந்து 46 விழுக்காடாக குறைந்துள்ளதாக ஸ்டாக்ஹோமில் உள்ள சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் சிப்ரி தெரிவித்துள்ளது.

2012 முதல் 16 வரையிலான காலகட்டத்திலும், 2017 முதல் 21 வரையிலான காலத்திலும் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 21 சதவிகிதமாக குறைந்துவிட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், 2017 - 2021 வரையிலான காலகட்டத்தில் உலகில் பெருமளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்தது இந்தியா தான் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் மொத்த உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 11 விழுக்காட்டை இந்தியா கொண்டிருந்தது என்றும் பாதுகாப்பு சிந்தனைக்குழு கூறியிருக்கிறது.

2012 முதல் 2016 வரையிலும், 2017 முதல் 2021 வரையிலும் இந்தியாவுக்கு அதிகளவில் ஆயுதங்களை வழங்கும் நாடாக ரஷ்யா இருந்தது என்றும் இந்தக் காலகட்டத்தில் பல பெரிய செயல் திட்டங்கள் செயலிழந்ததால் ரஷ்யாவின் ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்வது 47 சதவிகிதம் குறைந்துவிட்டது என்றும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com