மூக்கில் எலுமிச்சை சாறு விட்டால் கொரோனா சரியாகிவிடும் என வதந்தி : கர்நாடகா ஆசிரியர் பலி
மூக்கினுள் எலுமிச்சை சாற்றை விட்டால் கொரோனா சரியாகிவிடும் என்ற வதந்தியை நம்பி , அதனை முயற்சித்த கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா பெருந்தொற்றை விட ஆபத்தானவையாக மாறியுள்ளன, கொரோனாவுக்கு இது தான் சிகிச்சை என கூறி சமூக ஊடகங்களில் வலம் வரும் பதிவுகள். அப்படி மூக்கினுள் எலுமிச்சை சாற்றை விட்டால், அது ஆக்சிஜன் அளவை அதிகரித்து கொரோனாவால் இருந்து காக்கும் என்ற வீடியோவை முன்னாள் எம்பி விஜய் சங்கேஸ்வர் வெளியிட்டிருக்கிறார்.
இதனை நம்பிய கர்நாடகா மாநிலம் சிந்தானூரை சேர்ந்த 45 வயது ஆசிரியர், பசவராஜ் மல்லிபட்டில், தனக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் மூக்கினுள் எலுமிச்சை சாற்றை விட்டிருக்கிறார். பின்னர் வாந்தி எடுத்த அவர் உயிரிழந்துவிட்டார். பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்பி உயிரை பறிக்கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.