சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே, நீட் தேர்வு சாதகமாக இருக்கும் என தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
கோவையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், நீட் தேர்வு குறித்து பல்வேறு சந்தேகங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் நீட் தேர்வுக்கான இணைசெயலாளரிடம் கேட்டிருந்தார். அதன்படி எத்தகைய அமைப்பு நீட் தேர்வுக்கான வினாத்தாளை தயாரிக்க உள்ளது என்ற கேள்விக்கு, தேர்வுக்கான கேள்விகளை,சிபிஎஸ்இ தயார் செய்வதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
எத்தகைய பாடத்திட்ட மாணவர்கள், நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, பதில் அளிக்கப்படவில்லை.
மேலும்பெரும்பாலான கேள்விகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில்தான் பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.