ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்PTI

"சாதி, செல்வம், மொழியால் மக்களை எடைபோடக் கூடாது" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்!

ஒரு நபரின் மதிப்பானது அவரது சாதி அல்லது பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு அமையக்கூடாது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
Published on

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சோன்பைரி கிராமத்தில் 'இந்து சம்மேளனம்' நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஆ.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார்.

File Image
File ImagePt web

அப்போது பேசிய அவர், சமூக நல்லிணக்கத்தை நோக்கிய முதல் படி, ஒருவரது மனதில் உள்ள பிரிவினை மற்றும் பாகுபாடு உணர்வுகளை அகற்றி, அனைவரையும் நம்முடையவர்களாக நடத்துவதாகும். ஒட்டுமொத்த நாடும் அனைவருக்கும் சொந்தமானது; இந்த உணர்வே உண்மையான சமூக நல்லிணக்கமாகும். ஒரு நபரின் மதிப்பானது அவரது சாதி அல்லது பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு அமையக்கூடாது” என்பதை அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”அரசியலமைப்பின் முகவுரை, அடிப்படைக் கடமைகள் மற்றும் குடிமக்களின் பொறுப்புகள் ஆகியவற்றை தொடர்ந்து படித்து பின்பற்ற வேண்டும். அவற்றுடன்,பெரியவர்களை மதிப்பது, ஏழைகளுக்கு உதவுவது போன்ற பாரம்பரிய சமூக பொறுப்புகளையும் சேர்த்து பின்பற்ற வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
176 கோடி ரூபாயாக குறைந்த சென்னை பல்கலைக்கழகத்தின் கார்பஸ் பண்ட்.? கல்வியாளர்கள் வேதனை.!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com