இந்தியா
‘பாஜகவை எதிர்ப்பது இந்துக்களை எதிர்ப்பதாகாது’ - ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர்
‘பாஜகவை எதிர்ப்பது இந்துக்களை எதிர்ப்பதாகாது’ - ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர்
இந்து சமூகம் என்றால் பாரதிய ஜனதா என்று அர்த்தமல்ல என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்
ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி கோவாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''இந்து சமூகம் என்பது பாரதிய ஜனதா என்று அர்த்தமல்ல. பாஜகவை எதிர்ப்பது இந்துக்களை எதிர்ப்பதற்குச் சமம் அல்ல. அரசியல் சண்டை தொடரும். ஆனால் அதனை இந்து சமூகத்துடன் தொடர்புப்படுத்தக்கூடாது'' எனத் தெரிவித்துள்ளார்.