\
குடியரசு தினத்தன்று கேரளாவில் தேசிய கொடியேற்ற மோகன் பகவத் திட்டம்?

குடியரசு தினத்தன்று கேரளாவில் தேசிய கொடியேற்ற மோகன் பகவத் திட்டம்?

குடியரசு தினத்தன்று கேரளாவில் தேசிய கொடியேற்ற மோகன் பகவத் திட்டம்?
Published on: 

வரும் குடியரசுத் தினத்தன்று கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனவரி 26ம் தேதி குடியரசு தின கொண்டாட்டட்டத்தின் போது ஒவ்வொரு பள்ளியிலும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டுமே தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என கேரள மாநிலத்தில் உள்ள ள்ளிகளுக்கு அரசு சார்பில் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு வருடந்தோறும் ஒவ்வொரு குடியரசு மற்றும் சுதந்திர தின விழாவையொட்டி இந்த சுற்றறிக்கையை அனுப்புவது வழக்கம்தான்.

இந்நிலையில் வரும் குடியரசுத் தினத்தன்று கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சுதந்திர தினத்தன்று போதும் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இது அப்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த விவகாரத்தில் பாலக்காடு ஆட்சியர் அப்பள்ளிக்கு மெமோவும் அனுப்பியிருந்தார். அந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் குடியரசு தினத்தன்று மோகன் பகவத் தேசியக் கொடி ஏற்ற திட்டுமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com