பீகார்  தொழிற்சாலை விபத்தில்  6 பேர் உயிரிழப்பு - தலா ரூ.4 லட்சம் நிவாரணம்

பீகார்  தொழிற்சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - தலா ரூ.4 லட்சம் நிவாரணம்

பீகார்  தொழிற்சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - தலா ரூ.4 லட்சம் நிவாரணம்
Published on

பீகார் மாநிலம் முசாபர்பூரில் தனியார் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து சிதறிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு; உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் தனியாருக்கு சொந்தமான நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த தொழிற்சாலையில், இன்று காலை 10 மணியளவில் அங்கு உள்ள கொதிகலன் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 6-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  மேலும் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாய்லர் வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தில் உயிரிந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அதே நேரத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com