ஒரு நாளைக்கு 25 ஆயிரம் - சொகுசு பங்களாவில் கர்நாடக எம்.எல்.ஏக்கள்  

ஒரு நாளைக்கு 25 ஆயிரம் - சொகுசு பங்களாவில் கர்நாடக எம்.எல்.ஏக்கள்  
ஒரு நாளைக்கு 25 ஆயிரம் - சொகுசு பங்களாவில் கர்நாடக எம்.எல்.ஏக்கள்  

கர்நாடகாவில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் குடகு மாவட்டத்திலுள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

கர்நாடக அரசியலில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அங்குள்ள ஆளும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த இரு கட்சியையும் சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து கர்நாடகா அமைச்சரவையிலிருந்த 21 காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் குடகு மாவட்டத்திலுள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சொகுசு விடுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் 10 வில்லா, 7 பங்களாக்கள் மற்றும் சில டிலக்ஸ் ரூம் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் வாடகை ஒரு நாளைக்கு 9 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை உள்ளது. 

அதேசமயம் ராஜினாமா செய்த 12 எம்.எல்.ஏக்கள் மும்பையின் பாந்ரா-குர்லா பகுதியிலுள்ள சொகுசு விடுதியில் ஒரு நாளைக்கு 10ஆயிரம் ரூபாய் வரை வாடகையாக உள்ளது. பொதுவாக இது போன்ற பரப்பரப்பான அரசியல் சூழலில் எம்.எல்.ஏக்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயற செய்வது அல்லது சொகுசு விடுதகளில் தங்க வைப்பது வழக்கம். குறிப்பாக கர்நாடகாவில் கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஒட்டு மொத்தமாக ஒரு சொகுசு விடுதிக்கு மாற்றப்பட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com