மூலிகை பொருட்கள் உற்பத்திக்காக ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! - நிர்மலா சீதாராமன்

மூலிகை பொருட்கள் உற்பத்திக்காக ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! - நிர்மலா சீதாராமன்
மூலிகை பொருட்கள் உற்பத்திக்காக ரூ.4,000 கோடி ஒதுக்கீடு!  - நிர்மலா சீதாராமன்

கால்நடை வளர்ப்பு மற்றும் மூலிகைப் பொருட்கள் உற்பத்தி நிதியை ஒதுக்கீடு செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

ரூ.20 லட்சம் கோடியிலான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வெளியிட்டு வரும் நிர்மலா சீதாராமன், கால்நடைகளுக்கான நோய்த் தடுப்புத் திட்டத்துக்காக ரூ.13,343 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கால்நடைகளுக்கு 100% நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். தேனி வளர்ப்பு, தேன் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். புதிய திட்டத்தின் மூலம் 2 லட்சம் தேன் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

மருத்துவ மூலிகை பயிர்களின் சாகுபடிக்காக ரூ.4,000 கோடி ஒதுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மூலிகை விவசாயம் அடுத்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் என்ற அவர், கங்கை நதிக்கரையில் மூலிகைகள் உற்பத்தி செய்யப்பட்டு, அவை மண்டல வாரியாக கிடங்குகளில் பதப்படுத்தப்படும் எனவும், அதன்மூலம் ரூ.5 ஆயிரம் கோடி வரை வருமானம் ஈட்ட முடியும் என நம்புவதாகக் கூறினார். தற்போது தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்குக்கு வழங்கப்படும் போக்குவரத்து மானியம் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு வழங்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com