3 கோடி விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடனுதவி - நிர்மலா சீதாராமன்

3 கோடி விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடனுதவி - நிர்மலா சீதாராமன்
3 கோடி விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடனுதவி - நிர்மலா சீதாராமன்

தன்னிறைவு திட்டத்தின் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கான திட்டமொன்று அறிவிக்கப்படும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து திட்ட விளக்கங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். முதற்கட்டமாக ரூ.3.6 லட்சம் கோடிக்கான திட்டங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறு,குறு நிறுவனங்களுக்கான கடன், பிஃப் தொகையை அரசே செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். இன்றைய அறிவிப்பில் புலம்பெயர் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கான திட்டம் ஒன்று வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார். அத்துடன் 3 கோடி விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக ரூ.4.22 லட்சம் கோடி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com