\
பட்ஜெட் 2019: புதிதாக வருகிறது 20 ரூபாய் நாணயம்

பட்ஜெட் 2019: புதிதாக வருகிறது 20 ரூபாய் நாணயம்

பட்ஜெட் 2019: புதிதாக வருகிறது 20 ரூபாய் நாணயம்
Published on

புதிதாக 20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார். அப்போது புதிய 20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று அறிவித்தார். 

அவர் மேலும் கூறும்போது, ‘’பாவையற்றோரும் தெரிந்து கொள்ளும் வகையில், ரூ.1, ரூ.2, ரூ.5. ரூ.10 புதிய நாணயங்கள் வெளியிடப்படும். கடனில் வாங்கப்படும் மின்சார வாகனத்துக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும். ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இனி 25 சதவிகித வரி வசூலிக்கப்படும்’’ என்று தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com