4 ஆண்டுகளில் எம்.பி.க்களுக்கு 1,997 கோடி ஊதியம்

4 ஆண்டுகளில் எம்.பி.க்களுக்கு 1,997 கோடி ஊதியம்
4 ஆண்டுகளில் எம்.பி.க்களுக்கு 1,997 கோடி ஊதியம்

எம்.பி.க்‌களுக்கு 4 ஆண்டுகளில் 1,997 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய‌வந்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுட் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மக்களவை செயலகத்திடம் விவரங்களை கேட்டறிந்தார். இதற்கான பதிலை வழங்கிய மக்களவை செ‌யலகம், மக்களவையில் 545 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 245 எம்.பி.க்களும் உ‌ள்ளனர் என்றும் இதில் மக்களவை எம்.பி.க்களுக்கு கடந்த 4 ஆண்டுக‌ளில் ஊதியம் மற்றும் சலுகைக‌ளாக 1,554 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு எம்.பி.க்களுக்கும் தலா 71.29 லட்சம் ரூபாய் ஊதியம் மற்றும் சலுகையாக அளிக்கப்‌பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

மாநிலங்களவை எம்.பி.களுக்கு 4 ஆண்டுகளில் ‌443 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு எம்.பி.க்கும் தலா 44.33 லட்சம் ரூபாய் ஊதியம் மற்றும் சலுகைகளாக அளிக்கப்பட்டுள்ளதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com