4 மாநிலங்களுக்கு பேரிடர் நிதிpt
இந்தியா
4 மாநிலங்களுக்கு ரூ.1,280 கோடி பேரிடர் நிதி! தமிழகத்திற்கு எவ்வளவு?
தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி தொகுப்பில் கூடுதலாக ஆயிரத்து 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் 4 மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண கூடுதல் நிதியாக ஆயிரத்து 280 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ள நிலையில் அதில் தமிழகத்திற்கு 522 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு கூடுதல் பேரிடர் நிதி!
2024ஆம் ஆண்டில் ஏற்பட்ட புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களுக்காக கூடுதல் நிவாரண நிதியாக 4 மாநிலங்களுக்கு ஆயிரத்து 280 கோடி ரூபாயை ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் பிஹாருக்கு அதிகபட்சமாக 589 கோடி ரூபாயும் இமாசல பிரதேசத்திற்கு 136 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 522 கோடி ரூபாயும் புதுச்சேரிக்கு 33 கோடி ரூபாயும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகை
ஏற்கனவே விடுவிக்கப்பட்ட தொகையுடன் கூடுதலாக வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.