\
விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: மத்திய அமைச்சர்

விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: மத்திய அமைச்சர்

விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: மத்திய அமைச்சர்
Published on

துபாயில் இருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரை இறங்கும் போது இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி உள்பட 18 பேர் பலியானார்கள். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு நிவாரணமாக தலா ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் எனவும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com