ரூ.1.2 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி

ரூ.1.2 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி

ரூ.1.2 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி
Published on

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2017 - 18ஆம் நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளதாக புள்ளவிவரம் தெரிவிக்கிறது. 

பொதுத்துறை வங்கிகள் 2017 - 18ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளதாக புள்ளவிவரம் தெரிவிக்கிறது. சென்ற 10 ஆண்டுகளில் கடந்த நிதி ஆண்டில்தான் அதிக அளவில் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரியவந்துள்ளது. 2017 - 18 நிதி ஆண்டில் 21 பொதுத்துறை வங்களில் 85 ஆயிரத்து 370 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தரஆய்வு நிறுவனமான இக்ராவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வங்கிகளின் நஷ்டத்தை விட 140 சதவீதம் அதிகமாக வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 40 ஆயிரத்து 196 கோடி ரூபாயும், கனரா வங்கி 8 ஆயிரத்து 310 கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கி 7 ஆயிரத்து 407 கோடி ரூபாயும் வராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. அதேபோல, பாங்க்‌ ஆஃப் பரோடா, இந்திய ஓவர்சீஸ் வங்கி, பேங்க‌ ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, அலகாபாத் வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2013 - 14 ஆம் நிதி ஆண்டில் 34 ஆயிரத்து 409 கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டில் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடியா‌க அது அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com