\
'ரூ.1,000 நோட்டுகளை திரும்ப கொண்டுவர வேண்டும்' - ஆய்வில் முடிவு

'ரூ.1,000 நோட்டுகளை திரும்ப கொண்டுவர வேண்டும்' - ஆய்வில் முடிவு

'ரூ.1,000 நோட்டுகளை திரும்ப கொண்டுவர வேண்டும்' - ஆய்வில் முடிவு
Published on

மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட வேண்டும் என 69 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாட்டில் புழக்கத்தில் இருந்த 16.24 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 1000 மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் கடந்த நவம்பர் மாதம் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இது நாட்டு மக்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த பண மதிப்பிழப்பு தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த WAY2ONLINE என்ற செய்தி சார்ந்த ஆப் ஒன்று ஆய்வு நடத்தியது. இதில், ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு இன்னல்களை எதிர்கொண்டதாக, 62 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 69 சதவிகித மக்கள் ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப கொண்டுவர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com