காஷ்மீரை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ராஷ்டிரிய ரைபிள் படை விரைவில் மறுசீரமைப்பு?

காஷ்மீரை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ராஷ்டிரிய ரைபிள் படை விரைவில் மறுசீரமைப்பு?

காஷ்மீரை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ராஷ்டிரிய ரைபிள் படை விரைவில் மறுசீரமைப்பு?
Published on

ஜம்மு காஷ்மீரை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ராஷ்டிரிய ரைபிள் படை விரைவில் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்த நிலையில் 1990ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பை மட்டுமே  பலப்படுத்தும் நோக்கமாக ராஷ்டிரிய ரைபிள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் ஜம்மு காஷ்மீரில் உதம்பூரில் உள்ளது.

இப்போது 63 பட்டாலியன்கள், அதாவது ஏறத்தாழ 80 ஆயிரம் வீரர்களை கொண்ட படையாக உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கை குறைந்துள்ளாதால் ராஷ்டிரிய ரைபிள் படையை மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரத்தில், 2032ம் ஆண்டுக்குள் இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி செய்யும் அக்னி பத் வீரர்கள் 50/50 என்ற நிலையை அடையும் என கூறப்படுவதால் அக்னிபத் வீரர்களை ஜம்மு காஷ்மீரில் பணியில் ஈடுபட வைக்கலாம் எனவும், இதனால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியளவு குறையலாம் என ஆலோசனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com