\
மும்பை மின்வெட்டு... அன்றே சொன்னாரா ஆர்ச்சர்? வைரலாகி வரும் பழைய ட்வீட்..!

மும்பை மின்வெட்டு... அன்றே சொன்னாரா ஆர்ச்சர்? வைரலாகி வரும் பழைய ட்வீட்..!

மும்பை மின்வெட்டு... அன்றே சொன்னாரா ஆர்ச்சர்? வைரலாகி வரும் பழைய ட்வீட்..!
Published on

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்ச்சர் ட்விட்டரில் பதிவிட்டிருந்த ட்வீட்டுகள் இப்போது இந்தியாவில் வைரலாகி வருகிறது. மும்பையில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தடையோடு ஆர்ச்சரின் பழைய ட்வீட்டுகள் ஒத்துப்போவதால் அது டிரெண்டாகி வருகிறது. 

கடந்த 2013 மார்ச் மாதத்தில் ஆர்ச்சர் ‘LIGHTS OUT’ என ட்வீட் செய்துள்ளார். அது மும்பையின் இன்றைய சூழலுடன் தொடர்பு கொண்டதாக இணையதள பயனர்கள் பார்க்கின்றனர்.

அதே போல 2014 மே மாதத்தில் ‘MUMBAI DESERVE IT’ என ஆர்ச்சர் ட்வீட் செய்துள்ளார். அது 2014 ஐபிஎல் QUALIFIER சுற்றில் ராஜஸ்தானை மும்பை வீழ்த்தியதற்காக ஆர்ச்சர் பகிர்ந்த ட்வீட்டாகும். 

அதே ஆண்டில் ‘MUMBAI GONE’ என மும்பையில் பெய்த கனமழையை அடுத்து ஆர்ச்சர் ட்வீட் செய்த்துள்ளார்.

இப்படி மும்பை குறித்து கடந்த காலங்களில் ஆர்ச்சர் பகிர்ந்த ட்வீட்களை நிகழ் காலத்தோடு ஒப்பிட்டு ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

பலமுறை இது போல ஆர்ச்சரின் பழைய ட்வீட்கள் திடீரென டிரெண்டாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.   

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com